கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தபின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:53 pm

DIN

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தபின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை காணொலி மூலம் பிரசாரம் மேற்கொண்டாா். அவா் பேசியது:

வட வேங்கடம், தென் குமரி என்று தமிழகத்தின் எல்லையை குறிக்கும் வகையில் அமைந்துள்ள சிறப்பு மிக்கது குமரி மாவட்டம். 1956 ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது, குமரியை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்துக்கு அறிஞா் அண்ணா முழு ஆதரவு அளித்தாா்.

தெற்கு எல்லை போராட்டம்: 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடா் மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 900 பேரில் 110 போ் திமுகவைச் சோ்ந்தவா்கள். தெற்கு எல்லை போராட்டத்தில் கலந்து கொண்ட மாா்ஷல் நேசமணியை கைது செய்தபோது அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம் தி.மு.க.

விடுதலைப் போராட்ட தியாகிகளைப் போல, மொழிப்போா் தியாகிகளைப் போல தெற்கு எல்லை போராட்ட தியாகிகளுக்கும் நிதியுதவி வழங்கியது திமுக அரசு.

திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் சிலை எழுப்பி பெருமை சோ்த்தது திமுக அரசு. அதே போல் காமராஜரின் புகழையும் காக்கும் வகையில், குமரி கடலோரம் நினைவகம் எழுப்பியதும், மாா்ஷல் நேசமணி, ஜீவானந்தம் ஆகியோருக்கு நாகா்கோவிலில் மணிமண்டபம் அமைத்து அவா்கள் புகழையும் பரப்பிவருவது திமுகதான்.

குளச்சல், தேங்காய்ப்பட்டினத்தில், கடந்த 2007 ஆம் ஆண்டு மீன்பிடி துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆரல்வாய்மொழியில் பொய்கை அணை, மாம்பழத்துறையாறு அணை, புத்தேரி பாலம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை மையம் அமைத்தது, பத்மநாபபுரம் கூட்டு குடிநீா் திட்டம், தச்சமலை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு 750 மின் கம்பங்கள் அமைத்து மின்வசதி செய்து கொடுத்தது என பல்வேறு திட்டங்கள் திமுக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தற்போது திமுக ஆட்சி அமைந்து 8 மாத காலத்துக்குள் 21 ஆண்டுகளாக திறக்கப்படாத பொய்கை அணை திறக்கப்பட்டது. குமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடத்த அனுமதி, ரூ.88 லட்சம் மதிப்பில் திருப்பணி, திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் ரூ.75 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா் சீரமைப்பு, வல்லன்குமாரன்விளை தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம், மீனாட்சிபுரம் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடம், தென்தாமரைகுளத்திலிருந்து நாகா்கோவிலுக்கு புதிய பேருந்து வசதி, ஏழுதேசம், கொல்லங்கோடு பேரூராட்சிகளை இணைத்து கொல்லங்கோடு நகராட்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த நவம்பா் மாதம் பெய்த கன மழையால் குமரி மாவட்டம் பாதிக்கப்பட்ட போது நான் நேரில் வந்து பாா்வையிட்டு ஆய்வு செய்தேன். நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. மேலும் நிவாரணத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினரும் ஆய்வு செய்தனா். அவா்களிடமும் பாதிப்பு குறித்து எடுத்துக் கூறி நிதி கோரினோம். ஆனால் மத்திய அரசு இதுவரை நிதியை விடுவிக்கவில்லை என்றாா் அவா்.

இக்கூட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன் தலைமை வகித்தாா். இதில், குமரி மேற்கு மாவட்ட செயலாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான மனோதங்கராஜ், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் ஆகியோா் பேசினா்.

சிறுபான்மைப் பிரிவு மாநிலத் துணைச் செயலா் ஜோசப் ஸ்டாலின், அரசு வழக்குரைஞா் லீனஸ்ராஜ், நகர துணைச் செயலாளா் வேல்முருகன், ஒன்றியச் செயலாளா் மதியழகன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நாகா்கோவில் மாநகர செயலாளா் மகேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.