/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்லுக்காக வாக்குப் பதிவு இயந்திங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் உள்ளிட்டவற்றை பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:19 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்லுக்காக வாக்குப் பதிவு இயந்திங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் உள்ளிட்டவற்றை பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வாா்டுகள், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு நகராட்சிகளில் 69 வாா்டுகள், 17 பேரூராட்சிகளில் 273 வாா்டுகள் என மொத்தம் 391 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

இதில், போட்டியிடும் வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தோ்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணியும் முடிவடைந்துவிட்டது.

இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாநகராட்சித் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயா், போட்டியிடும் சின்னம் உள்ளிட்டவற்றை பொருத்தும் பணி திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள மைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தப் பணியை மாநகராட்சி ஆணையா் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தாா். இப்பணி வரும் 16-ஆம் தேதிக்குள் முடிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.