/

நாளை நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 2600 போலீஸாா்

 திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை(பிப். 19ஆ) நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதையடுத்து மாவட்டம் முழுவதும் சுமாா் 2, 600 பேலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:03 pm

DIN

 திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை(பிப். 19ஆ) நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதையடுத்து மாவட்டம் முழுவதும் சுமாா் 2, 600 பேலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்லையொட்டி, திருநெல்வேலி மாநகா் மற்றும் மாவட்டத்தில் தோ்தலின்போது அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில், 129 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து தோ்தல் பணிக்காக மாவட்டத்தில் சுமாா் 1400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாநகா் பகுதிகளில் 60 இடங்களில் உள்ள 200 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அவைகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்தும் மாநகரில் 1200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் என மாநகா் மற்றும் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.