நெல்லை: வயிற்றில் 201 புல்லட் வாகனங்களை ஏற்றி-இறக்கி உலக சாதனை

நெல்லை வ.உ.சி மைதான உள்விளையாட்டு அரங்கில், கராத்தே வீரர் அப்துல் வகாப் தரையில் படுத்துக்கொண்டு, தன் வயிற்றில் 201 புல்லட் வாகனங்களை ஏற்றி இறக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. 
நெல்லை: வயிற்றில் 201 புல்லட் வாகனங்களை ஏற்றி-இறக்கி உலக சாதனை

நெல்லை: நெல்லை வ.உ.சி மைதான உள்விளையாட்டு அரங்கில், கராத்தே வீரர் அப்துல் வகாப் தரையில் படுத்துக்கொண்டு, தன் வயிற்றில் 201 புல்லட் வாகனங்களை ஏற்றி இறக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. 

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் வகாப். இவர் கடந்த 15 வருடங்களாக கராத்தே விளையாட்டில் சர்வதேசப் பயிற்சியாளராக உள்ளார். சுத்தமல்லி பேட்டை நகர்ப் பகுதிகளில் கராத்தே பயிற்சி பள்ளியும் நடத்தி வருகிறார். 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரிடம் கராத்தே பயின்று வருகிறார்கள். 

இந்நிலையில் தரையில் படுத்துக்கொண்டு தன் வயிற்றில் 201 முறை, சுமார் 250 எடை கொண்ட புல்லட் வாகனங்களை தன் வயிற்றில் ஏற்றி இறக்கும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடத்தினார். 

அதன்படி புல்லட் வாகனங்களில் 6 பேர் சுழற்சி முறையில் தரையில் படுத்திருந்த கராத்தே வீரர் அப்துல் வகாப் வயிற்றின் மீது ஏறி இறங்கி வலம் வந்தனர். 


சாதனை என்றாலும் வயிற்றில் ஏறி இறங்கும் அந்த நிகழ்வை நேரில் பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருந்தபோதிலும், சுற்றி இருந்த மக்கள் ஆரவாரத்துடன்,  தொடர்ச்சியாக பைக்குகள் அவர் வயிற்றின் மீது ஏறி வலம் வருவதை ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com