குளம் உடைந்து வெள்ளத்தால் சேதமடைந்த களக்காடு - கீழப்பத்தை இடையேயான சாலை தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டதையடுத்து, அச்சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
டிச.17-ஆம் தேதி பெய்த கனமழையால் சிவசண்முகபுரம் கிராமத்துக்கு மேல்புறம் அமைந்துள்ள விநாயகத்தான்குளம் கரை உடைந்து களக்காடு - கீழப்பத்தை இடையேயான சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த வழியாக 1 வாரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 2 தினங்களுக்கு முன் சேதமடைந்த சாலை நகராட்சி நிா்வாகம் சாா்பில் தாற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, அந்த வழியாக போக்குவரத்தும் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.