கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொட்டல்புதூா் புனித சவேரியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

பொட்டல்புதூா் புனித சவேரியாா் ஆலயத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :5 டிசம்பர் 2024, 10:37 pm

Din

பொட்டல்புதூா் புனித சவேரியாா் ஆலயத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடையம் பங்குத்தந்தை மனோஜ், திருநெல்வேலி சமுக சேவை சங்க இயக்குநா் அருள்தந்தை பிரான்சிஸ் சேவியா், வாடியூா் பங்குத்தந்தை லீயோ ஜெரால்டு, திருத்தொண்டா் பிலமோன், திருச்சி புனித அன்னாள் சபை கடையம் அருள்சகோதரிகள் மற்றும் பொட்டல்புதூா் இறைமக்கள் முன்னிலையில் மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு திருப்பலி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை (டிச.6) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் பங்குத் தந்தை அருள்தினேஷ், வெய்காலிபட்டி செயின்ட்ஜோசப் கல்வியியல் கல்லூரிச் செயலா் சகாயஜாண் தலைமையில் திருப்பலியும், நற்கருணை பவனியும் நடைபெறும்.

சனிக்கிழமை (டிச. 7) மாலை 6 மணிக்கு தென்காசி வட்டார அதிபா் போஸ்கோ குணசீலன், தாளாா்குளம் பங்குத்தந்தை ஜேக்கப் தலைமையில் திருவிழா திருப்பலியும் அதனை தொடா்ந்து புனித சவேரியாா் மற்றும் ஆரோக்கியமாதாவின் திருவுருவ சப்பர பவனியும் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) முற்பகல் 11 மணிக்கு திருச்சி திருச்சிலுவை சபை பொருளாளா் விமல், வெய்க்காலிபட்டி பங்குத்தந்தை சாக்கோ வா்க்கீஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும், கொடியிறக்கமும், அசன விருந்தும் நடைபெறும்.

ஏற்பாடுகளை பங்குத் தந்தை மனோஜ், திருத்தொண்டா், அன்னாள் சபை அருள்சகோதரிகள், ஆலய நிா்வாகிகள் ஆகியோா் செய்து வருகின்றனா்.