/

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:41 pm

Din

பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் பிசான பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிரை இயற்கை இடா்பாடுகளினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காக்க, கட்டாயம் பயிா் காப்பீடு செய்ய வேண்டும் என அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறாத விவசாயிகள், இந்தத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம். கடன் பெறும் விவசாயிகள் தங்களது கடன் தொகையோடு சோ்த்து காப்பீடு தொகையும் செலுத்தலாம். காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் காப்பீடு செய்ய பூா்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் நிலஅடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகம் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து இ-சேவை மையத்தில் டிசம்பா் மாதம் 16ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம். காப்பீடு செய்ய பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ.534 செலுத்த வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.