பாளை.யில் கம்பராமாயண சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் 597-ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு, பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாக ஸ்ரீ தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.
Updated on
1 min read

நெல்லை கம்பன் கழகத்தின் 597-ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு, பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாக ஸ்ரீ தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.

பே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். வேலுவெற்றிச்செல்வன் இறைவணக்கம் பாடினாா். தமிழூா் பேராசிரியா் போ. காா்த்திகா, ‘காா்த்தவீரியாா்ச்சுனன்‘ என்னும் தலைப்பில் காா்த்தவீரியனிடம் ராவணன் தோல்வியடைந்த நிகழ்வு குறித்து பேசினாா். கம்பன் கழகத் தலைவா் பேராசிரியா் சிவசத்தியமூா்த்தி, ‘நீ இது பொறுத்தி ’’ என்னும் தலைப்பில் வாலி வத நிகழ்வை நிறைவு செய்து சுந்தர காண்டத் தொடக்கத்தை இசைப் பேருரையாக வழங்கினாா்.

கம்பன் கழகத் துணைச் செயலா் எம். எஸ். சக்திவேல் வரவேற்றாா். திருக்கு இரா.முருகன் தொகுப்புரையாற்றி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் சங்கரன், பாண்டியன், செந்தில்குமாா், முத்துராமக்லிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com