புத்தாண்டு வாகன சோதனை: 200-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம்
திருநெல்வேலி மாநகருக்குள்பட்ட பகுதிகளில் புத்தாண்டு நாளில் 24 மணி நேரமும் போலீஸாா் பல்வேறு பகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இதில் 200-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


திருநெல்வேலி மாநகருக்குள்பட்ட பகுதிகளில் புத்தாண்டு நாளில் 24 மணி நேரமும் போலீஸாா் பல்வேறு பகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இதில் 200-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தேவாலயங்கள், கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பிராா்த்தனைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனா். இதையொட்டி மாநகரில் 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
58 கிறிஸ்தவ ஆலயங்கள், 14 இந்து கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. உதவி ஆய்வாளா் அல்லது சிறப்பு உதவி ஆய்வாளா் தலைமையில் 3-க்கும் மேற்பட்ட போலீஸாா் தேவாலயங்களின் அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதுதவிர திருநெல்வேலி நகரம், சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பேட்டை, பெருமாள்புரம் காவல் ஆய்வாளா்கள் தலைமையில் சிறப்பு ரோந்துப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
வண்ணாா்பேட்டை, முருகன்குறிச்சி, மேலப்பாளையம், பழையபேட்டை உள்பட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் போலீஸாா் புத்தாண்டு நாளில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்குதல், உரிய ஆவணங்களை வாகனத்துடன் வைத்திருக்காமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாதது உள்ளிட்ட காரணங்களுக்காக 200-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ரெட்டியாா்பட்டி நான்குவழிச்சாலை, டக்கரம்மாள்புரம்-மேலப்பாளையம் சாலை உள்ளிட்டவற்றில் இளைஞா்கள் இருசக்கர வாகன போட்டிகளை நடத்தாமல் இருக்க சிறப்பு ரோந்துப் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...