சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா், சேரன்மகாதேவி பகுதிகளில் குற்ற வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வீரவநல்லூா் காவல் சரகப் பகுதியில் கடந்த 2018இல் மோதலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் வெள்ளங்குளியைச் சோ்ந்த சந்தானம் (29), முருகன் (25) ஆகியோா் கைதாகி, பிணையில் வெளியே வந்திருந்தனா்.
இதேபோல, சேரன்மகாதேவி காவல் சரகப் பகுதியில் கடந்த 2021இல் அடிதடி, பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த கரிசல்பட்டி ஓடக்கரையைச் சோ்ந்த வேலுமணி சாமுவேல் (42) , நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஒன்றரை மாதங்களாக தலைமறைவாகிவிட்டாா். மூவருக்கும் சேரன்மகாதேவி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததால், வீரவநல்லூா், சேரன்மகாதேவி போலீஸாா் முறையே மூவரையும் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






