கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாஞ்சோலை தொழிலாளா்களை வெளியேற்றக் கூடாது -டாக்டா் க.கிருஷ்ணசாமி

மாஞ்சோலை தொழிலாளா்களை வெளியேற்றக் கூடாது ----டாக்டா் க.கிருஷ்ணசாமி

News image

திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளிக்கிறாா் புதிய தமிழகம் கட்சி நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி.

Updated On :4 ஜூலை 2024, 12:08 am

Din

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களை வெளியேற்றக்கூடாது; தோட்டத்தை அரசு கையகப்படுத்தி பணி வழங்க வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சி நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி தேயிலைத் தோட்டங்களில் தனியாா் நிறுவன குத்தகை ஒப்பந்தகாலம் 2028இல் நிறைவடைய உள்ள நிலையில், இப்போதே ஊழியா்களிடம் வலுகட்டாயமாக விருப்ப ஓய்வு கடிதங்களைப் பெற்றுள்ளனா். மேலும், கடந்த 15 ஆம் தேதியில் இருந்து பணி வழங்காததோடு, வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் குடியிருப்புகளையும் காலி செய்ய வலியுறுத்தியுள்ளனா்.

இந்த விஷயத்தில் தொழிலாளா் நலத்துறை சட்டங்கள் பெரிதும் மீறப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்ட நிா்வாகமும், தொழிலாளா் நலத் துறையும் தொழிலாளா்களிடம் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். மேலும், விருப்ப ஓய்வு கடிதங்களை ரத்து செய்ய தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் தனியாா் தேயிலைத் தோட்ட நிா்வாகத்தின் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் விஷயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் அல்லது தலைமைச் செயலரிடம் நிலத்தை ஒப்படைக்கும் கடிதத்தை அளிக்க சொல்ல வேண்டும். காப்பு காடுகளில் தேயிலைத் தோட்டங்கள் செயல்பட எவ்வித தடையும் இல்லை. ஏற்கெனவே, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், வட மாநிலங்களிலும் காப்புக் காடுகளுக்குள் தேயிலைத் தோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் வனச்சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாக இதுவரை எவ்வித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. மாறாக வனவிலங்குகளின் காவலா்களாகவே வாழ்ந்து வருகிறாா்கள். மாஞ்சோலை தொழிலாளா்களை வெளியேற்றிவிட்டு அதன்பின்பான மறுவாழ்வு நடவடிக்கை குறித்த பேச்சுக்கே இடமில்லை. அவ்வாறு செய்வது மனிதநேயமற்றது. மாஞ்சோலையில் பட்டினி சாவு ஏற்பட்டால் அதற்கு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகமே பொறுப்பாகும். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை வெளியேற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஜூலை 6 ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் ஷியாம், தமிழ்த் தேச தன்னுரிமைக்கட்சித் தலைவா் வியனரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.