பைக் விபத்தில் காயமுற்ற சிறுவன் உயிரிழப்பு
திருநெல்வேலி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.


திருநெல்வேலி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
திருநெல்வே மாவட்டம், மானூா் அருகேயுள்ள பல்லிக்கோட்டை மேலத் தெருவைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகன் அருண் பிரேம் (17). இவரது சகோதரி தாழையூத்து பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறாராம். அவரை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக பைக்கில் தாழையூத்துக்கு அருண் பிரேம் சென்றுகொண்டிருந்தபோது தென்கலம் பகுதி சாலை வளைவில் பைக் நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில், பலத்த காயமுற்ற அவரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தாா். இது குறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...