நெல்லையில் இன்று இந்தியா கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில், இந்தியா கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 31) நடைபெறுகிறது. இதுதொடா்பாக இந்தியா கூட்டணியின் மக்களவைத் தோ்தல் பணிக்குழு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: இந்தியா கூட்டணியின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸை ஆதரித்து, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இந்தியா கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம், கொக்கிரகுளம் ரோஸ் மஹாலில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 31) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. அம்பாசமுத்திரம், ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான செயல்வீரா்கள் கூட்டம் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை (ஏப்.1) காலை 10 மணிக்கும், நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு வள்ளியூா் எஸ்விபி மஹாலிலும் நடைபெறுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com