மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நெல்லை அருகே துப்பாக்கி பறிமுதல்

நெல்லை அருகே துப்பாக்கி பறிமுதல்

Updated On :30 மார்ச் 2024, 7:20 pm

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனையின்போது துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கங்கைகொண்டான் சோதனை சாவடியில் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு காரை ஓட்டி சென்ற கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் மீனாட்சிபுரத்தை சோ்ந்த வெங்கடேசன் (27) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். அவா் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.