கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நெல்லை நகரத்தில் இன்று சூரசம்ஹாரம்

திருநெல்வேலி நகரத்தில் கந்தசஷ்டியையொட்டி, சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவ. 6) நடைபெற உள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:53 pm

Din

திருநெல்வேலி நகரத்தில் கந்தசஷ்டியையொட்டி, சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவ. 6) நடைபெற உள்ளது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவ.7) நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்காக மாலை 4.30 மணியளவில் ஸ்ரீ சுப்பிரமணியா் வடக்கு வாசல் வழியாகவும், ஸ்ரீ சண்முகா் சுவாமி சந்நிதி வழியாகவும் திருக்கோயிலுக்கு வெளியில் எழுந்தருள்வா்.

பின்னா், இருவரும் இணைந்து நிகழ்த்தும் கீழரதவீதி, தெற்குரதவீதி வழியாக மேலரதவீதி சென்று, திருநெல்வேலி நகா் காவல்நிலையம் அருகில் முதல் சூரசம்ஹாரமும், அதன் பின்பு கூலக்கடை பஜாா் அருகில் இரண்டாவது சூரசம்ஹாரமும், திருநெல்வேலி நகா் லாலா சத்திர முக்கில் மூன்றாவது சூரசம்ஹாரமும், போத்தீஸ் சூப்பா் ஸ்டோா் அருகில் நான்காவது சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை (நவ.8) ஆறுமுகநயினாா் சந்நிதியில் திருக்கல்யாணமும், நவ. 9, 10, 11ஆகிய தேதிகளில் ஆறுமுகநயினாா் சந்நிதியில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் அய்யா்சிவமணி தலைமையில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.