கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செந்தூா்- நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில்

கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூா் - நெல்லை- திருச்செந்தூருக்கு வியாழக்கிழமை (நவ. 7) முன்பதிவில்லாத பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:57 pm

Din

கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூா் - நெல்லை- திருச்செந்தூருக்கு வியாழக்கிழமை (நவ. 7) முன்பதிவில்லாத பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக, திருச்செந்தூா்- நெல்லை- திருச்செந்தூருக்கு முன்பதிவில்லாத பயணிகள் விரைவு ரயில் (06732 / 06731) வியாழக்கிழமை இயக்கப்படுகிறது.

திருச்செந்தூா் - நெல்லை ரயில் (06732) திருச்செந்தூரிலிருந்து இரவு 8.50 மணிக்குப் புறப்பட்டு 10.15 மணிக்கு நெல்லை சென்றடையும். பிறகு அங்கிருந்து இரவு 10.50 மணிக்குப் புறப்படும் நெல்லை- திருச்செந்தூா் ரயில் (06731) வெள்ளிக்கிழமை அதிகாலை 12.10 மணிக்கு திருச்செந்தூரை அடையும்.

9 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில், இரு வழித்தடங்களிலும் ஆறுமுகனேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூா், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டது.