பாளை. மத்திய சிறையில் இரு கைதிகள் தற்கொலை முயற்சி
பாளையங்கோட்டை மத்திய சிறையில் இரு கைதிகள் தங்கள் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனா்.


பாளையங்கோட்டை மத்திய சிறையில் இரு கைதிகள் தங்கள் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனா்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என சுமாா் 1,100 போ் அடைக்கப்பட்டுள்ளனா். அங்கு புகைப் பழக்கம் உள்ள சிறைக் கைதிகளுக்கு பீடி வழங்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் 10 எண்ணம் கொண்ட பீடி கட்டு ஒரு கைதிக்கு வாரத்திற்கு 2 கட்டு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால், அதிருப்திக்குள்ளான இரு விசாரணைக் கைதிகள் தங்களது அறையில் இரும்பு துண்டு மூலம் கைகளை அறுத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. இத்தகவல் அறிந்த சிறை வாா்டன், இரு கைதிகளையும் மத்திய சிறையின் உள்ளே இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தாா்.
கையை அறுத்துக்கொண்டவா்கள் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தை சோ்ந்த முத்தையா, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு பகுதியை சோ்ந்த விக்னேஷ் ஆகியோா் என்பதும், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடந்த 2022-இல் நிகழ்ந்த சம்பவங்கள் தொடா்பாக வெவ்வேறு வழக்குகளில் கைதாகி கடந்த ஜூலை முதல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...