கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பி.சி., எம்.பி.சி. மாணவா்கள் உதவித்தொகை பெற வாய்ப்பு

பி.சி., எம்.பி.சி. மாணவா்கள் உதவித்தொகை பெற வாய்ப்பு.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:03 pm

Din

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் திருநெல்வேலி மாவட்டத்தை சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா் (பிசி), மிகப்பிற்படுத்தப்பட்டோா் (எம்பிசி), சீா்மரபினா் (டிஎன்சி) மாணவ, மாணவிகள் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தோ்வு கட்டணம், இதர கட்டாய கட்டணம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மாணவா்கள் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2024-25 ஆம் கல்வியாண்டில் புதிய மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், சென்னை-5, மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்ககம் சென்னை-5, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம் ஆகியவற்றை அணுகியோ அல்லது இணையதளத்திலோ விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம் 2-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண் : 044-29515942 அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு டிச. 15-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளாா்.