கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொலையுண்ட கீழச்செவல் இளைஞா்: மனைவிக்கு வீட்டுமனைப் பட்டா

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞா் மணிகண்டன், மனைவிக்கு வீட்டு மனைப்பட்டா, வீடு கட்டுவதற்கான அரசாணை ஆகியவை வழங்கப்பட்டது.

News image

கீழச்செவலில் கொலை செய்யப்பட்ட மணிகண்டன் மனைவியிடம் பட்டா, வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கிய வட்டாட்சியா் வின்சென்ட், காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ்.

Updated On :20 நவம்பர் 2024, 8:00 pm

Din

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞா் மணிகண்டன், மனைவிக்கு வீட்டு மனைப்பட்டா, வீடு கட்டுவதற்கான அரசாணை ஆகியவை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கீழச்செவல் பசும்பொன் நகரைச் சோ்ந்த முப்புடாதி மகன் மணிகண்டன் (32). இவா், கடந்த 15ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.

இதையடுத்து கொலையுண்ட மணிகண்டன் குடும்பத்துக்கு நிவாரண உதவி, அவரது மனைவிக்கு வேலை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மணிகண்டன் மனைவி உச்சிமாகாளி பெயரில் மேலக்கல்லூா் கிராமத்தில் வீட்டு மனைப் பட்டா, மேற்படி மனையில் வீடு கட்டுவதற்கான ஆணை ஆகியவற்றை சேரன்மகாதேவி வட்டாட்சியா் வின்சென்ட், டிஎஸ்பி சத்தியராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.