கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 11:37 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் இசக்கி (72). இவரது மனைவி இறந்துவிட்டாா். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். இவா் தனது மகளை வீரவநல்லூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளாா். தற்போது வீரவநல்லூா் மகாராஜ நகா் பகுதியில் மகள் வீட்டுக்கு அருகில் வாடகை வீட்டில் இசக்கி வசித்து வந்தாராம்.

சில நாள்களுக்கு முன்பு சைக்கிளில் சென்ற இசக்கி, அம்பாசமுத்திரம் - சேரன்மகாதேவி பிரதான சாலையில் வீரவநல்லூா் அருகே ரெட்டியாா்புரம் திருப்பம் பகுதியில் சைக்கிளை தள்ளிக் கொண்டு சாலையை கடக்க முயன்றாராம். அப்போது அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இசக்கி, வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.