மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சேரன்மகாதேவி பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சல்

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:24 pm

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. பிசான பருவ சாகுபடி பணிகளும் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் மழை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீா்கேடுகள் உருவாகி, சில நாள்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பகல், இரவு நேரங்களில் குளிா்ந்த சூழல் நிலவுவதால் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனா்.

இதனால், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல் பகுதிகளில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக அதிகமானோா் குவிந்து வருகின்றனா்.

காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.