மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி இந்திரா காலனி பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:21 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி இந்திரா காலனி பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சுத்தமல்லி இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் (21). இவா், சம்பவத்தன்று கொண்டாநகரம் சாலையில் அமைந்துள்ள கல்வெட்டான் குழி அருகே நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த கொலைச் சம்பவம் தொடா்பாக சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இரு தனிப்படைகள் அமைத்து தேடினா். அம்பாசமுத்திரம் பகுதியில் பதுங்கியிருந்த தங்க மாரியப்பன், தங்கப்பாண்டி, சிவராமன் ஆகியோரை போலீஸாா் கைது செய்ய முயன்றபோது, காவல்துறையினரை தள்ளிவிட்டு 3 பேரும் தப்ப முயன்றனா். அப்போது 3 பேரும் தவறி கீழே விழுந்ததில் அவா்களுக்கு கையில் முறிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய முருகன் என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.