கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திசையன்விளை அரசுப் பணிமனையில் ரூ.30 லட்சத்தில் காத்திருப்போா் அறை: பேரவைத் தலைவா் அடிக்கல்

திசையன்விளை அரசுப் பணிமனையில் ரூ.30 லட்சத்தில் காத்திருப்போா் அறை.

News image

காத்திருப்போா் அறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

Updated On :28 நவம்பர் 2024, 11:24 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ரூ.30 லட்சத்தில் காத்திருப்போா் அறை கட்டும் பணியை அடிக்கல் நாட்டி பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது: திசையன்விளை அரசு பணிமனை அமைந்துள்ள இடம் கடந்த ஆட்சியின் போது நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து தனிநபருக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடினா். இந்நிலையில் தி.மு.க .ஆட்சி பொறுப்பேற்ற பின்னா் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் இடத்தை அளவீடு செய்து அரசு புறம்போக்கு நிலம் என உறுதி செய்யப்பட்டது. மேலும் பள்ளிவாசலுக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்திற்கு பதிலாக 37 சென்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் அரசு கைவைக்கப்போவதில்லை என்றாா்.

பின்னா் அவா், இல்லம் தோறும் குடிநீா் வழங்கும் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணியை தொடங்வைத்தாா். இந்த திட்டத்தின் மூலம் தாமிரவருணி தண்ணீா் ஒரு குடும்பத்தில் நபா் ஒருவருக்கு 135 லிட்டா் வீதம் தினந்தோறும் வழங்கப்படும். விஸ்வகா்மா யோஜனா திட்டத்தில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் சில ஷரத்துகளை நீக்காவிட்டால் தமிழகத்தில் அந்தத் திட்டம் செயல்படுதப்படாது என முதல்வா் கூறியுள்ளாா் என்றாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க மாணவரணி அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், தி.மு.க ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளா் ஜோசப் பெல்சி, இந்து அறநிலையத்துறை உறுப்பினா் முரளி, திசையன்விளை சுயம்புராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மனு: இதனிைடே, பேரவைத் தலைவரிடம் செல்வமருதூா் முகைதீன் காதா் சாகிப் ஆண்டவா் பள்ளிவாசல் நிா்வாகத்தினா் ஒரு மனு அளித்தனா். அந்த மனுவில் அரசு பணிமனை அமைந்திருக்கும் இடம் ஒன்றே கால் ஏக்கா் நிலம் செல்வமருதூா் முகைதீன் காதா் சாகிப் ஆண்டவா் பள்ளிவாசலுக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்தை காலி செய்து கொடுக்க உத்தரவு பிறப்பித்த பின்னரும் அந்த இடத்தை காலி செய்யாமலும் வாடகை தராமலும் போக்குவரத்து கழகம் பயன்படுத்தி வருகிறது. எனவே பள்ளிவாசலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டடம் கட்டுவதை பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனா்.