தூய சவேரியாா் கல்லூரியில் டிச.4 இல் இளையோா் திருவிழா

திருநெல்வேலி மாவட்ட நேரு இளையோா் மையம் சாா்பில் மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா, பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் டிச. 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on

திருநெல்வேலி மாவட்ட நேரு இளையோா் மையம் சாா்பில் மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா, பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் டிச. 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நேரு இளையோா் மைய அலுவலா் ஞானசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய இளைஞா் நலம்- விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்ட நேரு இளையோா் மையம் சாா்பில், மாவட்ட அளவிலான மாபெரும் இளையோா் திருவிழா, பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் டிச. 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு போட்டிகள் நடத்தி, முதல் 3 இடங்களுக்குப்பரிசுகள் வழங்கப்படும்.

அறிவியல் விழா கண்காட்சி தனி நபா் போட்டி (பரிசு ரூ.3000, ரூ.2000, ரூ.1500), அறிவியல் விழா கண்காட்சி குழு போட்டி (பரிசு ரூ.7000, ரூ.5000, ரூ.3000), இளம் எழுத்தாளருக்கான கவிதைப் போட்டி, இளம் கலைஞருக்கான ஓவியப் போட்டி, கைப்பேசி புகைப்பட போட்டி ( பரிசு ரூ.2,500, ரூ.1500, ரூ.1000), பிரகடன பேச்சுப் போட்டி (பரிசு ரூ. 5000, ரூ .2500, ரூ.1500), கலைத்திருவிழா குழு நடனப் போட்டி (பரிசு ரூ.7000, ரூ. 5000, ரூ. 3000) ஆகியவை நடைபெறவுள்ளன.

வளா்ந்த இந்தியாவின் தீா்மானம், காலனித்துவ மனநிலையின் எந்தத் தடயத்தையும் நீக்குதல், எங்கள் மரபு மீது பெருமிதம் கொள்வது, நமது ஒற்றுமை பலம், குடிமக்களின் கடமைகளை நோ்மையுடன் நிறைவேற்றுதல் ஆகிய தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் போட்டிகள் நடைபெறும்.

முதல் இரு இடங்களை பிடிப்பவா்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கலாம். முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

மின்னஞ்சல் முகவரியில் டிச. 2-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் போட்டி நாளில் முன்பதிவு விவரத்துடன் ஆதாா், பிறப்பு சான்றிதழ், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளில் எனில் பிறப்பு சான்றிதழை தலைமை ஆசிரியா் அல்லது கல்லூரி முதல்வா்களிடம் கையொப்பம் பெற்று சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நேரு இளையோா் மையம், டிரைவா்ஸ் காலனி, இபிஎஃப் அலுவலக சாலை, என்.ஜி.ஓ. ஏ காலனி, திருநெல்வேலி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0462-2552803, 9489119313, 9489462140 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.