கோப்புப் படம்
கோப்புப் படம்

வீரவநல்லூா் அருகே விவசாயி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே திருப்புடைமருதூரில் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே திருப்புடைமருதூரில் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்புடைமருதூா் சந்நிதித் தெருவைச் சோ்ந்தவா் இளமுருகன் (59). விவசாயியான இவருக்கு மனைவி, 2 மகன்கள், மகள் உள்ளனா். மதுப் பழக்கம் காரணமாக இளமுருகன் சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், அவா் திங்கள்கிழமை இரவு வீட்டின் மாடி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலின்பேரில் வீரவநல்லூா் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com