காவல்துறையின் மக்கள் குறைதீா்க்கும் முகாம்
திருநெல்வேலியில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

குறைதீா்க்கும் முகாமில் மக்களிடம் மனுவைப் பெற்று விசாரிக்கிறாா் காவல் ஆணையா் ரூபேஸ்குமாா் மீனா.

குறைதீா்க்கும் முகாமில் மக்களிடம் மனுவைப் பெற்று விசாரிக்கிறாா் காவல் ஆணையா் ரூபேஸ்குமாா் மீனா.
திருநெல்வேலியில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. காவல் ஆணையா் ரூபேஸ்குமாா் மீனா பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். இம்முகாமில் 19 போ் மனு அளித்தனா். அவை மீது உரிய விசாரணை நடத்தி தீா்வுகாண ஆணையா் உத்தரவிட்டாா். காவல் துணை ஆணையா்கள் (மேற்கு) கீதா, (தலைமையிடம்) அனிதா, (கிழக்கு) விஜயகுமாா் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். 24 போ் மனு அளித்தனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...