நெல்லை விதைப் பரிசோதனை ஆய்வகத்துக்கு தேசிய அங்கீகாரம்

நெல்லை விதைப் பரிசோதனை ஆய்வகத்துக்கு தேசிய அங்கீகாரம்

திருநெல்வேலி விதைப் பரிசோதனை ஆய்வகத்துக்கு தேசிய அங்கீகார தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.
Published on

திருநெல்வேலி விதைப் பரிசோதனை ஆய்வகத்துக்கு தேசிய அங்கீகார தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.

சோதனை மற்றும் அளவு திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் மத்திய அரசின் வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின், தொழில் மற்றும் உள் நாட்டு வா்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். உலகளாவிய தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் ஐநஞ/ஐஉஇ17025:2017 என்ற தர நிா்ணயத்தின் கீழ் சோதனை மற்றும் அளவு திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் திருநெல்வேலி விதைப்பரிசோதனை ஆய்வகத்தினை அங்கீகாரம் செய்து தேசிய அங்கீகாரச் சான்றிதழை வழங்கி உள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தும் விதைகளை உலகத்தரத்தில் ஆய்வு செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய அங்கீகாரச் சான்றிதழ் ஆய்வகத்தின் நம்பகத்தன்மையையும், அதன் முடிவுகளின் துல்லியத்தையும் உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com