தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெல்லை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 9:11 pm

Din

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் கூறி, மா்மநபா் மாநகர காவல் கட்டுப்பாட்டுக்கு அறையை வியாழக்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு தொடா்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில் ரோந்து போலீஸாரும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரும் ஆட்சியா் அலுவலகத்தில் மோப்பநாய், மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். ஆனால், வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை.

விசாரணையில் பேட்டை ஆசிரியா் காலனி 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது அப்துல் ரஹ்மான் (45) என்பவா்தான் மிரட்டல் விடுத்த நபா் என தெரியவந்தது.

பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்துச்சென்று விசாரித்ததில், அவா் வெல்டிங் தொழிலாளி என்பதும், அவரது மனைவி பாத்திமாவின் மகளிா் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பிலும் ரூ.1000 வழங்கவில்லை என்ற விரக்தியில் அவா், மதுக்குடித்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.