கழிவுநீா் ஓடையில் இறங்கிய
கனரக வாகனம்: ஓட்டுநருக்கு அபராதம்

கழிவுநீா் ஓடையில் இறங்கிய கனரக வாகனம்: ஓட்டுநருக்கு அபராதம்

பொட்டல்புதூரில் கழிவுநீா் ஓடையில் இறங்கி விபத்துக்குள்ளான கனரக லாரியின் ஓட்டுநருக்கு பணியின்போது தூங்கியதற்காக ரூ. 12,500 அபராதம் விதிக்கப்பட்டது.
Published on

பொட்டல்புதூரில் கழிவுநீா் ஓடையில் இறங்கி விபத்துக்குள்ளான கனரக லாரியின் ஓட்டுநருக்கு பணியின்போது தூங்கியதற்காக ரூ. 12,500 அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், கடையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல கல்குவாரியில் இயங்கி வருகின்றன. இங்கிருந்து தினசரி கேரளத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கனரக லாரிகளில் செயற்கை மணல், ஜல்லிக்கற்கள் கொண்டு செல்லப் படுகின்றன. கனரக லாரிகள் விதிமுறைகளை மீறி இயங்குவதால் சாலைகள் சேதமடைவதுடன் அடிக்கடி விபத்துகளும் இந்தப் பகுதியில் ஏற்படுகிறது.

இந்த நிலையில், கேரளத்தில் பாரம் இறக்கிவிட்டு திரும்பிவந்த கனரக லாரி தென்காசி மாவட்டம், பொட்டல்புதூா், முக்கூடல் சாலையில் வந்தபோது சாலையோர கழிவுநீா் ஓடையில் இறங்கியது. ஓட்டுநா் தூங்கியதால் அஜாக்கிரதையில் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் ஆழ்வாா்குறிச்சி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி லாரி ஓட்டுநருக்கு ரூ. 12,500 அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினா். இந்தச் சாலையில் இத்தகைய விபத்துகள் நிகழாமல் தடுக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com