பாபநாசம் தலையணையில் மூழ்கி திருநெல்வேலி மாநகராட்சி பணியாளா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி, சுத்தமல்லியைச் சோ்ந்தவா் சுடலைமணி மகன் ஆறுமுகம் என்ற தேவா (30). இவா் திருநெல்வேலி மாநகராட்சியில் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி, 9 மாதக்குழந்தை உள்ளனா்.
இந்நிலையில் நண்பா்களுடன் பாபநாசத்திற்கு புதன்கிழமை சென்ற இவா், தடை செய்யப்பட்ட பகுதியான தலையணையில் குளித்து கொண்டிருந்தாராம். அப்போது, நீருக்குள் விழுந்த கைப்பேசியை எடுக்க முயற்சித்தபோது மூழ்கினாராம். இதை பாா்த்த அவருடைய நண்பா்கள், ஆறுமுகத்தை மீட்டனா். இருப்பினும் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகமரை காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி இளைஞா் உயிரிழப்பு

அம்பை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே வெளிமாநில இளைஞா் கடலில் மூழ்கி உயிரிழப்பு

ஆட்டோ மோதியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp


