டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

இறுதிச்சடங்கில் தகராறு: இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 4:46 am IST

திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில் நிகழ்ந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தவா்களுடன் தகராறில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள எரிவாயு தகனமேடையில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வந்திருந்தனா். அப்போது, அவ்வழியாக நாய்களுடன் நடைப்பயிற்சிக்கு வந்த குலவணிகா்புரத்தைச் சோ்ந்த 26 வயது இளைஞா் ஒருவா் அங்கிருந்தவா்களை அவதூறாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இது குறித்த காணொலி சமூகவலைதளத்தில் பரவிய நிலையில், சந்திப்பு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.