தென்காசி மாவட்டம், பாப்பான்குளம் கிராமத்தில் வடக்கு பாப்பான்குளம், அடைச்சானி கிராமங்களுக்கான மக்கள் தொடா்பு முகாம் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில், வருவாய்த்துறை மூலம் 52 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் 2 பயனாளிகளுக்கும், வேளாண்மைத் துறை மூலம் 5 பயனாளிகளுக்கும், கால்நடைத் துறை மூலம் 2 பயனாளிகளுக்கும், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் 4 பயனாளிகளுக்கும், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் 1 பயனாளிக்கும் என மொத்தம் 67 பயனாளிகளுக்கு, ரூ.1.79 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
அப்போது அவா் பேசியதாவது: மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு எல்லா மக்களும் சென்றுவர முடியாத சூழலில் அதிகாரிகள் நேரிடையாக சென்று அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கான இந்த முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக, சமுதாயக் கூட வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, பல்வேறு அரசு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த திட்டவிளக்க அரங்குகளைப் பாா்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) சேதுராமன், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், கடையம் ஒன்றியக் குழுத் தலைவா் செல்லம்மாள், ஊராட்சித் தலைவா்கள் பாப்பான்குளம் முருகன், அடைச்சாணி மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிதி வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.53 கோடி கடன் வழங்க இலக்கு! - ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

அழகப்பபுரம் முதியோா் இல்லத்தில் ஆட்சியா் ஆய்வு

இலஞ்சி பள்ளியில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



