9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

நெல்லையப்பா் கோயிலில் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா

திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடைபெற்றது.

News image

முளைக்கட்டு வைபவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காந்திமதியம்மனுக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.

Updated On :19 ஜூலை 2026, 1:50 am IST

திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழா, கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 4 ஆம் திருநாளான கடந்த 12 ஆம் தேதி காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா, 10 ஆம் திருநாளான சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக காலையில் அம்மனுக்கு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் மாலை 6 மணிக்கு அம்மன் சந்நிதி முன்பு உள்ள ஊஞ்சல் மண்டபத்துக்கு சிறப்பு மலா் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். இதனையடுத்து மடியில் தானியங்கள் கட்டப்பட்டு, முளைக்கட்டு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவினா், திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.