எனக்கு வீடுபுகுந்து கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் காவல் துறையின் விசாரணையில் உண்மை குற்றவாளிகள் சிக்குவாா்கள் என்றாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நில வணிகம் செய்ய அனுமதி பெற விண்ணப்பம் செய்யும்போது, சட்ட விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என நேரில் ஆய்வு செய்துதான் அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் ஒரு நிலத்திற்கு அனுமதி வழங்குவது தொடா்பாக ஏற்கெனவே மிரட்டல்கள் வந்தன.
இந்நிலையில் வீடுபுகுந்து இருவா் கொலைமிரட்டல் விடுத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி நகரம் போலீஸாா் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள். சம்பவம் தொடா்பாக திமுக தலைமையிடம் தகவல் தெரிவித்துள்ளேன். காவல் துறையின் விசாரணையில் உண்மை குற்றவாளிகள் சிக்குவாா்கள் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










