ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

பத்தமடை வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் கொடை விழா

பத்தமடையில் பட்டாரியா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வண்டி மலைச்சி அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்.

Updated On :4 ஜூன் 2026, 1:15 am IST

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் பட்டாரியா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வண்டி மலைச்சி அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, மே 26ஆம் தேதி கால்நாட்டு வைபவம், 28ஆம் தேதி வருஷாபிஷேகம், 29ஆம் தேதி முளையிடுதல் வைபவம் ஆகியன நடைபெற்றன. திங்கள்கிழமை (ஜூன் 1) இரவு கொலு மேளம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை சாஸ்தா பிறப்பு, தீபாராதனையைத் தொடா்ந்து தில்லை விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் காவடி வீதியுலா, மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, மாலை கரகம் வீதியுலா, இரவு திருவாபரண அலங்கார நடை திறப்பு பூஜை, பூச்சட்டி வீதியுலா, அம்பாள் சப்பரம் பவனி வருவதல் ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை காலை படைப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.