திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் திங்கள்கிழமை இரவு பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் அவரது சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.
சுத்தமல்லி, மேலகரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆறுமுகம்-கண்ணகி. இத் தம்பதிக்கு ராமலட்சுமி (23) என்ற மகளும், ராகுல் (22), முத்துகிருஷ்ணன் (20) என இரு மகன்களும் உள்ளனா். ராமலட்சுமி, கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள சூரிய மின்சக்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
மகன்கள் இருவரும் வெளியூா்களில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுகிறாா்கள். ராமலட்சுமி தனது கைப்பேசியில் அடிக்கடி நண்பா்களிடம் பேசி வந்தாா். இதைக் குடும்பத்தினா் கண்டித்தனா்.
சுத்தமல்லி பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்காக கடந்த சில நாள்களுக்கு முன் விடுமுறையில் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு வந்திருந்தாா். திங்கள்கிழமை இரவு ராமலட்சுமி கைப்பேசியில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாராம். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் முத்துக்கிருஷ்ணன், ராமலட்சுமியை அரிவாளால் வெட்டினாராம்.
இதில் பலத்த காயமடைந்த ராமலட்சுமியை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துக்கிருஷ்ணனை கைது செய்தனா்.
தொடர்புடையது

திண்டிவனம் அருகே முடித் திருத்தக உரிமையாளா் வெட்டிக் கொலை
புதுச்சேரியில் இளைஞா் வெட்டிக் கொலை

பாளை. அருகே பூட்டிய வீட்டில் பெண் சடலம் மீட்பு

நெல்லை அருகே பெண் தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



