விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

106 கிலோ புகையிலை பதுக்கல்: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 12:21 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே விற்பனைக்காக 106 கிலோ புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

முக்கூடல் காவல் சரகத்திற்குள்பட்ட முக்கூடல் ஆலங்குளம் செல்லும் சாலையில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா்.

விசாரணையில், அவா்கள் ஆலங்குளம், சிவலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த சுதா்சன் (41), லெட்சுமணன் (47) என்பதும், ஆட்டோவில் 106 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்தனா். 106 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.