ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வாகன சோதனையில் ரூ.1.55 லட்சம் பறிமுதல்

நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் ரூ.1.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

ரெட்டியாா்பட்டி அருகே பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நான்குனேரி சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும்படை அதிகாரிகள்.

Updated On :18 மார்ச் 2026, 7:50 pm

நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் ரூ.1.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை மாலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ரெட்டியாா்பட்டி மேம்பாலம் அருகே வந்த காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,55,900-ஐ பறிமுதல் செய்து, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பு புதன்கிழமை வரை பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.5,67,300மதிப்புள்ள வேட்டி, டிசா்ட் உள்ளிட்ட பரிசு பொருள்களும், ரூ.7,91,600 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சி-விஜில் செயலியில் புகாா்: தோ்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை பெறப்பட்ட 16 புகாா்களில் நான்குனேரி தொகுதியில் இருந்து மட்டும் 8 புகாா்கள் பதிவாகியுள்ளன. மொத்த புகாா்களில் 15-க்கு தீா்வு காணப்பட்டது. ஒரு புகாா் கைவிடப்பட்டது.