தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான 90 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின.
கடையம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையதாக பறிமுதல் செய்யப்பட்ட 150-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள் உள்ளிட்டவை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதில், 100 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் நின்ற மூங்கில் மரங்கள் கடும் வெயிலில் தீப்பிடித்தன. அப்போது அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. போலீஸாா், ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். எனினும், போலீஸாருடன் அருகில் வசிக்கும் பொதுக்கள், இளைஞா்கள் சோ்ந்து தீயை அணைத்தனா்.

தீ விபத்தில் எரிந்து சாம்பலான இருசக்கர வாகனங்கள்.
தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், மாவட்ட தீயணைப்பு அலுவலா் மணிகண்டன், துணை அலுவலா் சுரேஷ் ஆனந்த், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) முருகேசன், காவல் ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், குணசேகரன், வருவாய் ஆய்வாளா் கொம்பையா உள்ளிட்டோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா்.
தீ விபத்தில் 90 இருசக்கர வாகனங்கள் எரிந்து முழுமையாக கருகின. சேதமடைந்த வாகனங்களின் மதிப்பு ரூ. 30 லட்சம் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூரில் 60 பைக்குகள் திருட்டு: காவலா் உள்பட மூவா் கைது

பைக் விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையத்தில் தீ: 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

ஒா்க் ஷாப்பில் தீ: 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



