கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

அம்பையில் நெகிழிப் பயன்பாடு: கடைகளுக்கு அபராதம்

அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் பகுதியிலுள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தியோருக்கு அபராதம் விதித்தனா்.

News image

காசிநாத சுவாமி கோயில் பகுதியிலுள்ள கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்

Updated On :27 மே 2026, 1:58 am IST

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் பகுதியிலுள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தியோருக்கு அபராதம் விதித்தனா்.

ஆட்சியா் ரா. சுகுமாா் அறிவுறுத்தல், திருநெல்வேலி நகராட்சி மண்டல இயக்குநா் மகேஸ்வரியின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் ஆலோசனையில் சுகாதார அலுவலா் பாஸ்கா் தலைமையில் சுகாதார ஆய்வாளா் சிதம்பரராமலிங்கம், களப்பணி உதவியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா் உள்ளிட்டோா் காசிநாத சுவாமி கோயில் அருகே தாமிரவருணி படித்துறை பகுதியில் துணிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள கடைகளில் அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், நெகிழி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவது தெரியவந்ததையடுத்து, ரூ. 2,500 வரை அபராதம் விதித்தனா்; தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவது தொடா்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

Story image