வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காா் சாகுபடி: ஜூன் 1இல் பாபநாசம் அணையை திறக்க வலியுறுத்தல்

காா் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ஆட்சியா் இரா.சுகுமாரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

News image

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயிகள்

Updated On :27 மே 2026, 1:54 am IST

காா் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ஆட்சியா் இரா.சுகுமாரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

அதன்விவரம்: பாபநாசம் அணையில் இருந்து வடக்கு கோடைமேல் அழகியான், தெற்கு கோடைமேல் அழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி, பாளையங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி காா் சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது வழக்கம். இந்தக் கால்வாய்களில் வரும் தண்ணீரால் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களில் விவசாயம் நடைபெற்று, பல ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது.

கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலங்களில் திமுக ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜூன் மாதம் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுமாா் 85,000 ஏக்கா் விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு, விவசாயிகள் பலன் அடைந்தனா்.மேலும், கடந்த 2006-2011 வரையிலான காலங்களில் திமுக ஆட்சி காலத்தில் பாபநாசம் அணையில் சுமாா் 30 அடி தண்ணீா் இருந்தபோதிலும் காா் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் காா் சாகுபடிக்கு வடக்கு கோடைமேல் அழகியான், தெற்கு கோடை மேல்அழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி, பாளையங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தண்ணீா் திறப்பதற்கு விவசாய சங்கங்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்று கால்வாய்களில் தண்ணீா் திறப்பதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.