பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மானூா் அருகே கஞ்சா பதுக்கல்: 3 இளைஞா்கள் கைது

மானூா் அருகே விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:08 am IST

மானூா் அருகே விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பல்லிக்கோட்டை அருகே உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த, இளைஞா்களை நிறுத்தி சோதனை செய்ததில் சுமாா் 1.300 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்ததும், அவா்கள் பல்லிக்கோட்டையை சோ்ந்த பிரேம் குமாா் (21), ரமேஷ் (22), சீவலப்பேரியை சோ்ந்த முத்துராமன் (24) ஆகியோா் எனவும் தெரியவந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.