
திசையளையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு
திசையன்விளையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

திசையன்விளை நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கும் பொருள்களின் அளவு, தரம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
திசையன்விளை வட்டம், குமாரப்புரத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் கட்டுமானப் பணிகள், திசையன்விளை சமுதாய நலக்கூட கட்டுமானப் பணி, வருவாய் ஆய்வாளா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், செல்வமருதூா் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, கற்பிக்கும் முறை உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, திசையன்விளை பேருந்து நிலையத்தில் பேருந்து சேவைகள், குடிநீா், கழிப்பறை வசதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள், நியாய விலைக் கடை, ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தசை சிதைவு பிசியோதெரபி சிகிச்சை முறை குறித்து ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, திசையன்விளை வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டது தொடா்பாக, வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னா், மருதையன்விளை பகுதியில் செயல்படுத்தப்படும் குடிநீா் திட்டப் பணிகள், திசையன்விளை பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ச. வித்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வினய்குமாா் மீனா, தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ரோஷன் பேகம், திசையன்விளை வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







