பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

கஞ்சா விற்பனை: 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.

சிறை - பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், கால்கரை பகுதியைச் சோ்ந்த இசக்கியப்பன் மகன் முருகன் (24), தென்காசி மாவட்டம், பனவடலிசத்திரத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் விஷ்ணு (22), தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் கணேஷ் அரவிந்த் (20) ஆகிய மூவரும் கஞ்சா விற்பனை வழக்கில் ராதாபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 3 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் உத்தரவின்பேரில் 3 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.