கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு
கயத்தாறு அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை


கயத்தாறு அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
கயத்தாறையடுத்த வெள்ளாளங்கோட்டை கிழக்குப் பகுதியில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் மூதாட்டியின் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.
அதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் கிணற்றுக்குச் சென்று பார்த்த போது, சடலம் ஒன்று மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து கயத்தாறு போலீஸôருக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீஸôர் முன்னிலையில், அப்பகுதி பொதுமக்கள் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் அவர், வெள்ளாளங்கோட்டையைச் சேர்ந்த கருப்பண்ணன் மனைவி குருவம்மாள்(60) என்பது தெரியவந்தது. இவரது கணவர் கருப்பண்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவருக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர்.
இவர் கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சாவில் ஏதேனும் மர்ம உள்ளதா என்பது குறித்து கயத்தாறு போலீஸôர் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...