இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சமையலர் மீது தாக்குதல்: தொழிலாளி கைது

சாத்தான்குளம் அருகே சத்துணவு சமையலரை தாக்கியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:38 pm

தினமணி

:சாத்தான்குளம் அருகே சத்துணவு சமையலரை தாக்கியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகே வடக்கு அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் சாமுவேல் மனைவி பாத்திமா (40). இவர், அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் சத்துணவு சமையலராக உள்ளாராம். வெள்ளிக்கிழமை அவர், அங்குள்ள பொதுநல்லிக் குழாயில் துணி துவைத்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ஏ.ரூபன் (24) பாத்திமாவைக் கண்டித்தாராம்.

அப்போது ஏற்பட்ட தகராறில் பாத்திமாவை ரூபன் தாக்கி காயப்படுத்தினாராம். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பாத்திமா அளித்த புகாரின்பேரில் உதவி-ஆய்வாளர் கற்பகவள்ளி வழக்குப் பதிவு செய்து ரூபனை சனிக்கிழமை கைது செய்தார்.

மற்றொரு சம்பவம்:சாத்தான்குளம் அருகேயுள்ள திருவரங்கனேரியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சா.அற்பதராஜ் (35). இவர், வெள்ளிக்கிழமை துக்க வீட்டில் பலரை தகாத வார்த்தையில் திட்டி தகராறில் ஈடுப்பட்டாராம். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த விவசாயி வெ.பால்பாண்டி (75), அற்புதராஜை கண்டித்தாராம். இதில் ஏற்பட்ட தகராறில் அற்புதராஜ், பால்பாண்டியை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சாத்தான்குளம் உதவி -ஆய்வாளர் ஸ்டீபன் வழக்குப் பதிவு செய்து அற்புதராஜை தேடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.