மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நாளை தொடக்கம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மற்றும் இயந்திரவியல் பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்குகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:33 pm

தினமணி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மற்றும் இயந்திரவியல் பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்குகிறது.

கல்லூரி வளாகத்தில் நடைபெறும் உலோகப் பொருள் ஆக்க நுட்பத்தின் இப்போதைய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் கே.ராமசாமி தலைமை வகிக்கிறார். கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் கே.ஆர்.அருணாசலம், கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியும், இயக்குநருமான எஸ்.சி.சேத்தல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.