கோவில்பட்டி நகர அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அதிமுக நகரச் செயலர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் ராமர் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, நகர அதிமுக சார்பில் இம்மாதம் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கோவில்பட்டி நகர பெண்களுக்கான கோலப்போட்டி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஒரு நாளுக்கு 6 வார்டு வீதம் கோலப்போட்டி நடைபெறும் இந்த கோலப் போட்டிகள் மந்தித்தோப்பு சாலையில் உள்ள கூட்டுறவு பால் சொசைட்டி வளாகத்தில் நடத்துவது என்றும், கோலப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இம்மாதம் 25-ம் தேதி காந்தி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. முதல் பரிசாக முதல்வர் ஜெயலலிதா படம் பொறித்த 2 பவுன் தங்கச் சங்கிலி, 2-ம் பரிசாக ஒரு பவுன் கைச்சங்கிலி, 3-ம் பரிசு அரை பவுன் மோதிரம் மற்றும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எவர் சில்வர் குடம் ஆறுதல் பரிசாகவும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோலப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நகர அதிமுக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 94431-52917, 94431-25725 என்ற கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார் நகர அதிமுக செயலர் சங்கரபாண்டியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
முதன் முதலில்...
சிரி... சிரி...
வாழ்க்கையின் வழிகாட்டி திருக்குறள்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


