9 இடங்களில் இன்று அம்மா திட்ட முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 29) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 29) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 29) வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
அதன்படி,  தூத்துக்குடி வட்டம் திம்மராஜபுரம்,  ஸ்ரீவைகுண்டம் வட்டம் வட வல்லநாடு,  திருச்செந்தூர் வட்டம் மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் வட்டம் படுக்கப்பத்து,  கோவில்பட்டி வட்டம் கே.வெங்கடேஸ்வரபுரம், விளாத்திகுளம் வட்டம் ஜமீன்செங்கல்படை,  எட்டயபுரம் வட்டம் கீழஈரால்,  ஓட்டப்பிடாரம் வட்டம் பசுவந்தனை,  கயத்தாறு வட்டம் காளாம்பட்டி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
முகாமின்போது,  முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்,  பட்டா மாறுதல்,  இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,  உழவர் பாதுகாப்பு அட்டை,  பிறப்பு - இறப்பு சான்றுகள்,  சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதால்,  பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com