தூத்துக்குடியில் கல்லறைத் திருநாள்

கல்லறை திருநாளையொட்டி தூத்துக்குடியில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து மாலை அணிவித்து வியாழக்கிழமை வழிபாடு நடத்தினர்.
Updated on
1 min read

கல்லறை திருநாளையொட்டி தூத்துக்குடியில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து மாலை அணிவித்து வியாழக்கிழமை வழிபாடு நடத்தினர்.
  ஆண்டுதோறும் நவம்பர் 2 ஆம் தேதி ஆத்மாக்கள் தினம் என அழைக்கப்படும் கல்லறை திருநாள் கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அன்றையதினம் தங்கள் முன்னேர்களின் கல்லறையை சுத்தம் செய்து வர்ணம் பூசி பூக்கள் மற்றும் மாலைகளை கொண்டு அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி அவர்களை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்வது வழக்கம்.
 அதன்படி, நிகழாண்டு கல்லறைத் திருநாளான வியாழக்கிழமை தூத்துக்குடி ஜார்ஜ் சாலை மற்றும் பாளையங்கோட்டை சாலையில் உள்ள கல்லறைத் தோட்டங்களில் காலை முதலே ஏராளமானோர் தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து மலர்தூவி மாலை அணிவித்து மெழுகுவாத்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
  மேலும், கல்லறைத் திருநாளையொட்டி ஜார்ஜ் சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் வியாழக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், பங்குத் தந்தைகள் மற்றும் இறைமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
கோவில்பட்டி:  கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புனித வளனார் ஆலய பங்குத்தந்தை பீட்டர் தலைமையில், உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். இதில் திரளானோர் பங்குகொண்டனர்.
முன்னதாக, காலை கோவில்பட்டியையடுத்த லிங்கம்பட்டி, பூசாரிபட்டி, இலுப்பையூரணி மற்றும் பாண்டவர்மங்கலத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்திலும் ஆலய பங்குத் தந்தை, உதவி பங்குத்தந்தை ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com